21 ஆம் நூற்றாண்டுக் கலைத்திட்டம் – 21st century Curriculum

0

 21 ஆம் நூற்றாண்டுக் கலைத்திட்டம் – 21st century Curriculum

  • 21ம் நூற்றாண்டின் கற்றல் திறன்களான ஒன்றிணைத்து கற்றல், விமர்சனரீதியான சிந்தனை, புத்தாக்கம், பிரச்சினை தீர்த்தல் போன்ற திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் கலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
  • கலைத்திட்டம் செயற்பாடு சார்ந்த கலைத்திட்டமாக அமைதல் வேண்டும்.
  • எண்மிய சுதேசிகளை Digital Citizen உருவாக்குவதாக அமைதல் வேண்டும்.
  • 21ம் நூற்றாண்டின் திறன்களின் தொகுப்பை கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக மாணவர்களிடம் விருத்திசெய்ய வேண்டும்.
  • ஆசிரிய பயிற்சி நிறுவனங்களின் (முன்சேவை, சேவைக்கால) கலைத் திட்டங்களிலும் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும்.
  • மதிப்பீட்டு, கணிப்பீட்டு முறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
  • கற்றுக்கொண்டு வேலை செய்யும் வகையில் கலைத்திட்டம் சீரமைக்கப்பட வேண்டும்.
  • பாடசாலைக் காலத்திலேயே வாழ்க்கைத் தொழிலைக் கற்க சந்தர்ப்பம் அளித்தல் வேண்டும்.
  • தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
  • நான்காவது தொழில் புரட்சியை எதிர்கொள்ளக் கூடியவாறு கலைத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
  • மென்திறன்கள் கலைத்திட்டத்தின் ஊடாக வளர்க்கப்பட வேண்டும்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)