21ம் நூற்றாண்டில் கல்வி

0
 

21 ஆம் நூற்றாண்டின் கல்வி 


21 ஆம் நூற்றாண்டின் கல்வி என்பது, மேசைகளில் அமைதியாக அமர்ந்து, ஆசிரியர் கூறுவதை அல்லது கரும்பலகையில் அல்லது ஸ்மார்ட்போர்ட்டில் எழுதும் ஒவ்வொரு வார்த்தையையும்  எழுதுவது அல்ல. 

21ஆம் நூற்றாண்டுக் கல்வி பரீட்சைக்காகக் கற்பிப்பதோ, உயர் சித்தி பெறுவதற்கு மனப்பாடம் செய்வதோ மாணவர்களை ஒப்பிடுவதோ அல்ல, ஒவ்வொரு குழந்தையும் ஒரே பாதையில் செல்ல  வேண்டும் என்று கருதுவது அல்ல, மேலும் இது கால அட்டவணைக்கு உட்பட்டதல்ல.

அப்படியானால், 21 ஆம் நூற்றாண்டின் கல்வி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, அதை முழுமையாக வரையறுக்க முடியாது, ஏனெனில் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் சில விடயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

21 ஆம் நூற்றாண்டின் கல்வி என்பது பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களுக்கு பதிலளிக்கும் ஒன்றாகும்.

21 ஆம் நூற்றாண்டுக் கல்வி, வகுப்பறை தாண்டிய கல்வி ஆகும். சுருக்கமாக, இது 21 ஆம் நூற்றாண்டில் மாணவர்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் தேர்ச்சிகளை வழங்கும் கல்வியாகும்.

டாக்டர். கிம்பர்லி பீட்ச் மில்லர் (Dr. Kimberly Pietsch Miller) கூறுவது போல் இதன் மூச்சுக் கோடு (finish line) 13 தரத்தோடு முடிவதில்லை. அது வாழ்நாள் நீடித்த கல்வி ஆகும். 

21–ஆம் நூற்றாண்டின் திறன்கள்

21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் (21st century skills) என்பது திறன்கள், திறமை மற்றும் கற்றல் மனப்பான்மைகளை உள்ளடக்கியது, 21 ஆம் நூற்றாண்டில் சமூகத்திலும் பணியிடங்களிலும் கல்வியாளர்கள், வணிகத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களால் வெற்றி பெறுவதற்குத் தேவை என அடையாள காணப்பட்டுள்ள திறன்கள். இது வளர்ந்து வரும் பன்னாட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாகும், இது வேகமாக மாறிவரும் எண்ணிமயமாக்கல் சமுதாயத்தில் வெற்றிக்கான தயாரிப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான திறன்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திறன்களில் பல ஆழ்ந்த கற்றலுடன் தொடர்புடையவை, இது பகுப்பாய்வு, பகுத்தறிவு, சிக்கல் தீர்வு மற்றும் குழுப்பணி போன்ற திறன்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திறன்கள் வழக்கமான அறிவு சார்ந்த கல்வித் திறன்களிலிருந்து வேறுபடுகின்றன.

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 21 ஆம் நூற்றாண்டு வரை, சமூகப் பொருளாதாரமும் தொழினுட்பமும் விரைவான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இதனால் மாணவர்களை, வேலைவாய்ப்பிற்குத் தயார்ப்படுத்தும் கல்வி முறை மீதான கோரிக்கைகள் எழுந்துள்ளன. 1980-களின் தொடக்கத்தில், அரசு, கல்வியாளர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்கள், மாறிவரும் பணியிடங்கள் மற்றும் சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாணவர்களையும் தொழிலாளர்களையும் வழிநடத்துவதற்கான முக்கிய திறன்கள் மற்றும் செயல்படுத்தல் உத்திகளைக் கண்டறிந்து தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டனர்.

கற்றல் திறன் (Learning Skills

 
  • தொடர்பாடல் திறன் (Communicative Skills)
  • இணைந்து செயற்படும் திறன் (Collaborative Skills)
  • நூண்ணாய்வுச் சிந்தனை (Critical Thinking)
  • ஆக்கத்திறன் (Creative Skills)
எழுத்தறிவுத்திறன் (Literacy Skills)

  • தகவல் எழுத்தறிவு (Information Skills)
  • எண்மான எழுத்தறிவு (Digital Skills)
  • விஞ்ஞான எழுத்தறிவு (Science Skills)
  • நிதி எழுத்தறிவு(Financial Skills)
  • கலாசார எழுத்தறிவு (Cultural Skills)
வாழ்க்கைத் திறன் (Life Skills)

  • நெகிழும் தண்மை (Flexibility Skills)
  • தலைமைத்துவத்திறன் (Leadership Skills)
  • தொடக்குதல் திறன் (Initiative Skills)
  • உற்பத்தித் திறன் (Productivity Skills)
  • சமூகத்திறன் (Social Skills)
இந்த திறன்களில் பல கற்பித்தல் பணியில் அடையாளம் காணப்படுகின்றது, இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி பல்வேறு வடிவங்களில் இன்றுவரை தொடர்கிறது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)