இணைந்து செயற்படும் திறன் (Collaborative Skills)

0

இணைந்து செயற்படும் திறன்  (collaboration skills)


ஒரே நோக்கதையே உணர்ந்து இணைந்து மற்றவரோடு பணிப்புரியும் திறன். இந்தத் திறன் பல்வேறு சூழலுக்குத் தேவையான திறன். ஒற்றுமையாக வாழ்வதற்கும் எதிர்வரும் பிரச்சனையை ஒன்றுபட்டு தீர்ப்பதற்கும் இந்தக் கூட்டுப்பணித் திறனே அடிப்படை. கருத்து வேறுபாடு இருந்தாலும்  ஒத்து வேலை செய்தால்தான் ஒரு சமூகத்தின் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியும். அதை பாடசாலையிலிருந்து  வளர்த்தெடுக்க வேண்டும். இவை வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள். ஆகவே தங்களின் நுண்ணுணர்வு ஆற்றலை    (Emotional intelligence)  இவ்விடத்தில் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தர்க்கம் ஏற்பட்டு குழப்பம் விளைந்து பிளவு உண்டாகும்.  தனிமனித பகையைப் பொருட்படுத்தாமல்  குழு கொண்ட நோக்கத்திற்காகப் பணிசெய்யும் ஒற்றுமை கூட்டுப்பணியால் விளையும்.

என்னதான் தனித்திறன் பெற்றிருந்தாலும் ஊரோடு ஒத்துவாழ வேண்டும். அதற்கு பிறரின் ஒத்துழைப்பு (collaboration) வேண்டும். பிறரோடு ஒத்தியங்கவும் வேண்டும் (cooperation). எனவே, மாணவர்களைக் கூட்டுமுயற்சி, கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபடுத்தத் தக்க வகையில் செயற்பாடுகளை வடிவமைக்க வேண்டும். வேறு நாடுகளில் வாழும் மாணவர்களோடு தொடர்பாடவும் கூட்டுப்பணியிலும் கூட்டுத்திட்டங்களை வகுத்து செயற்படுத்தவும் மாணவருக்குத் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். இதை ஓர் அடைவுக்குறியீடாகக் Key performance index  (KPI) கொள்ள வேண்டும்.

இன்றிருக்கும் இணைய வசதிகள் இதை கண்டிப்பாகச் சாத்தியமாக்கும். உலகம் என்பது ஒரு வீடு. அதில் எல்லோரும் கூட்டுக்குடித்தனம் நடத்துகின்றோம். ஒத்துழைப்பும் ஒத்தியங்குதலும் மட்டுமே உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். கூட்டுப்பணியில் ஈடுபடும்போது கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றும். எனவே முரண்பாடுகள் களையவும் அல்லது முரண்களும் வேறுபாடுகளும் இயல்பே என்பதை உணர்த்தி மனித அன்பை வளர்க்கவும் மதிக்கவும் ஒத்துழைப்புக் கல்வியைக் கலாசாரமாக்கும் வித்தையை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.

  • கூட்டாக செயல்படுதல்
  • கூட்டாக முடிவெடுத்தல்
  • கூட்டாக வெற்றி பெறுதல்

இன்றைய இலங்கையர்களுக்குத் தேவைப்படுகின்ற சமூகத் திறன்களில் மிக முக்கியமானவை. இவற்றைப் பாடசாலைகளிலேதான் வளர்த்தெடுக்க முடியும்.

அடுத்து உயர்ச்சிந்தனைத் திறன்களான பகுத்தறிவுத் திறன், ஆக்கத் திறன் ஆகிய இரண்டும் அறிவார்ந்த செயல்பாட்டுக்கும், உண்மையைக் கண்டுபிடிக்கவும், புதியன உருவாக்கவும், பிரச்சனையைத் தீர்க்கவும் உதவும் சிந்தனைத் திறன்கள் ஆகும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)