அதாவது நுண்ணாய்வு சிந்தனை என்பது,
நம்பிக்கை மற்றும் செயலுக்கான வழிகாட்டியாக
- அவதானிப்பு ,
- அனுபவம் ,
- பிரதிபலிப்பு ,
- பகுத்தறிவு ,
தகவல் தொடர்புஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை தீவிரமாகவும் திறமையாகவும்
- கருத்தாக்கம் செய்தல் ,.
- பயன்படுத்துதல் ,
- பகுப்பாய்வு செய்தல் ,
- ஒருங்கிணைத்தல் ,
மதிப்பீடு செய்தல் ஆகியவற்றின் அறிவு சார் செயல் முறையாகும்.
நுண்ணாய்வு சிந்தனையின் அம்சங்கள்
- நேர்மையும் திறந்த மனதும்.
- சுறுசுறுப்பாக தகவல்களை சேகரித்தல்.
- வினாக்களை கேட்பதற்கான சந்தேகங்களை தீர்ப்பதற்கான ஆவல்.
- சுதந்திரமாக செயல்படல்.
- இனங்காணல் மற்றும் கணிப்பிடும் ஆற்றல்.
நுண்ணாய்வு சிந்தனைக்கான செயற்பாடுகள் சில
- தொடர்புடைய இணைப்புகளை உருவாக்க ஆழமாக சிந்தித்தல்
- பகுப்பாய்வு வினாக்களை தொடுத்தல்
- பலதரப்பட்ட கருத்துக்களை ஒருங்கிணைத்தல்
- தினமும் விமர்சன ரீதியாக சிந்தித்தல்
- பிரதிபலிப்பு சிந்தனையில் ஈடுபடல்
- சிக்கலை தீர்க்கும் படிகளை பின்பற்றல்
- புதிய மற்றும் சிறந்த தீர்வுகளை தேடல்
- சுதந்திரமாகவும் மற்றவர்களுடன் இணைந்து சிந்தித்தல்
- செயல்கள் அல்லது யோசனைகளின் விளைவுகளை மதிப்பிடல்

நுண்ணாய்வு சிந்தனையின் வகுப்பறை பிரயோகங்கள்
- ஆரம்ப பாடசாலைகளில் கதைகள் சொல்வதன் மூலம் பகுத்தறிந்து முடிவெடுக்கும் வாய்ப்புக்களை மாணவர்களுக்கு வழங்கல்.
- குழு வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்தல்.
- பகுத்தறிவு வினாக்களை மாணவர்களிடம் தொடுத்தல்
- சிந்தனை வரைபடங்களை பயன்படுத்தி கற்றல்
படவகையான பகுத்தறிவு சிந்தனை நுட்பங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதனை பயன்படுத்த பழக்குதல்